×

சிவகங்கை அருகே முத்தாளம்மனை வேண்டி ஆட்டம் ஆடி கொழுக்கட்டை சூறையிடும் வினோத திருவிழா கோலாகலம்..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் எஸ்.புத்தூர் அருகே முத்தாளம்மனை வேண்டி ஆட்டம் ஆடி கொழுக்கட்டை சூறையிடும் வினோத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பங்குனி பொங்கல் விழாவை ஒட்டி அம்மன்செட்டி குறிச்சி அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள மனப்பட்டி, செட்டிகுறிச்சி, உத்தம்பட்டி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டி நாள்தோறும் இரவில் ஆண்கள் மரக்குச்சிகளை கையில் வைத்து அடித்து கொண்டு ஆடும் வைந்தானை ஆடியும் மக்கள் குமியடித்து கொண்டாடியும் 8ம் நாளில் வீட்டுவாசலில் பொங்கலிட்டும், ஆடு, கோழிகளை பலியிட்டும் கொண்டாடினர்.

தொடர்ந்து 9ம் நாளில் செட்டிகுறிச்சி உள்ளிட்ட ஏழு கிராம மக்கள் வைந்தானை அடித்தவாரே அங்கிருந்து புறப்பட்டு அம்மன் செட்டி குறிச்சி முத்தாளம்மன் பொட்டலை கடைத்தனர். ஏழு ஊர் மக்களும் ஒன்றுகூடி கொழுக்கட்டை, தேங்காய் வயலில் முதல் முறையாக விளைந்த நெல் பயிறு உள்ளிட்ட தானியங்களை சுரையிட்டனர். தொடர்ந்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குச்சிகளை வைத்து கோலாட்டம் போன்ற வைந்தான் ஆட்டத்தை ஆடினர். இறுதியில் ஒரே நேரத்தில் வானத்தை நோக்கி குச்சிகளை எரிந்து விட்டு திரும்பி பார்க்காமல் கிணற்றில் சென்று தீர்த்தமாடி திருவிழாவை கொண்டாடினர்.

The post சிவகங்கை அருகே முத்தாளம்மனை வேண்டி ஆட்டம் ஆடி கொழுக்கட்டை சூறையிடும் வினோத திருவிழா கோலாகலம்..!! appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Mutthalamman ,Sivagangai ,S. Puthur ,
× RELATED சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு...