×

கொடைக்கானலில் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்

கொடைக்கானல், ஏப்.11: கொடைக்கானலில் ரூ.27 கோடியில் மேம்பாட்டு பணிகள் நிறைவேற்றப்படும் என நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொடைக்கானலில் நகர்மன்ற கூட்டம் நகர் மன்றத் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் நாராயணன், துணைத் தலைவர் மாய கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியை ரூ.7 கோடியில் புதுப்பிப்பதற்கும், மேம்பாட்டு பணிகள் செய்வதற்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகராட்சி பகுதியில் உள்ள 24 வார்டுகளில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மற்றும் தாங்கு சுவர் பணிகளுக்கு ரூ.14 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல குப்பை கிடங்கு சுற்றுச்சுவர், மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.ஐந்தரை கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது பற்றிய தீர்மானம் கொடைக்கானல் நகர் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. குப்பை தொட்டி இல்லாத நகராட்சி உருவாக்க வேண்டும் என்றும், சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கப்பட்டு ஒழுங்குபடுத்தவும், கொடைக்கானல் கோடை சீசன் காலத்தில் கூடுதலாக 50 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் ரூ.41 கோடியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கவும், மேலும் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கவும் நகராட்சி கூடடத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post கொடைக்கானலில் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Nagaramana ,Kodakianal ,Dinakaran ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்