×

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய தூத்துக்குடி யாசகர்: தேனி கலெக்டர் பாராட்டு

தேனி, ஏப். 11: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர்பாண்டியன்(73). இவர் யாசகம் பெற்று பிழைத்து வருகிறார். யாசகம் பெறும் பணத்தில் முதலமைச்சரின் பொது நிவாண நிதிக்கு பணத்தை வழங்குவதையும், கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கித் தருவதை கடமையாக செய்து வருகிறார். இந்நிலையில் யாசகரான பூல்பாண்டியன், நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருந்த மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்தை வங்கி மூலம் அனுப்பியதற்கான ரசீதை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து யாசகர்பாண்டியனை கலெக்டர் ஷஜீவனா பாராட்டினார். இது குறித்து யாசகரானபாண்டியன் கூறுகையில், ‘‘மும்பை செம்பூரில் வசித்து வந்த நான் கடந்த 2010ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, யாசகம் பெற்று பிழைப்பு நடத்த தொடங்கினேன். இந்த யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தை நான் வைத்துக் கொள்ளவிரும்பவில்லை. இதனை எனது சொந்த மாவட்டமான தூத்துக்குடி அரசு ஊராட்சி ஓன்றிய பள்ளிகளில் உபகரணங்கள் வாங்கிக்கொள்ள நிதி உதவியாக அளித்தேன். இதுவரை 400க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்துள்ளேன். இதுவரை ரூ.55 லட்சம் வரை நன்கொடையாகவும், பொது நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளேன். இதில் தான் எனக்கு பெரும் நிம்மதி உள்ளது’’ என்றார்.

The post முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய தூத்துக்குடி யாசகர்: தேனி கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Yasakar ,Theni ,Varpandian ,Alanginaru ,Chatankulam taluk, Thoothukudi district ,Yasakam ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு...