×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நிலுவை தொகை செலுத்தாத வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூ36 லட்சம்

  • கோயில் செயல் அலுவலர் தகவல்
  • சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வரும் வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை ரூ36 லட்சம் வரை இருப்பதால், அதனை உடனடியாக செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி நேற்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், ’காஞ்சிபுரம் ஏலவார் குழலி – சமேத ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடமான பிள்ளையார்பாளையம் பகுதியில் மாதனம்பாளையம் தெருவில் காசிக்காரத்தோட்டம் என்ற இடத்தில் 75க்கும் மேற்பட்ட வாடகைதாரர்கள் உள்ளனர். இவர்கள் அடிமனை வாடகைதாரர்களாகவும், அனுபவதாரர்களாகவும் இருந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அவர்களிடம் நேரில் தெரிவித்தும் வாடகை நிலுவைத் தொகையை செலுத்தாமல் இருந்து வருவதால், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன் சுற்றறிக்கையின்படியும், கோயில் அறங்காவலர்கள் குழுவின் ஒப்புதலின்படியும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி முதற்கட்டமாக கோயில் நுழைவுவாயில் பகுதியில் வாடகை நிலுவையாக வைத்திருக்கும் 51 நபர்களின் பெயர்களையும் எழுதி அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை வாடகை நிலுவையாக வைத்திருக்கின்றனர் என்ற விபரத்தையும் எச்சரிக்கைப் பலகையாக எழுதி விளம்பரப்படுத்தி இருக்கிறோம். எனவே, சம்பந்தப்பட்ட வாடகைதாரர்கள் உடனடியாக நிலுவைத்தொகையை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அறங்காவலர் குழுவில் கலந்தாலோசித்து உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வாடகை மொத்த நிலுவை ரூ36,44,000 ஆகவும் உள்ளதால், உடனடியாக நிலுவையை செலுத்தி, சட்ட நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்’ என்றார்.

The post காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நிலுவை தொகை செலுத்தாத வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூ36 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Ekamparanathar Temple ,Kanchipuram ,Kanchipuram Ekambaranathar temple ,Kanchipuram Ekambaranadhar temple ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...