×

இந்தியாவில் மீண்டும் வேகமாக உயர தொடங்கும் கொரோனா.. ஒரே நாளில் 5,880 பேருக்கு வைரஸ் பாதிப்பு!

டெல்லி : இந்தியாவில் பரவி வரும் கொரோனாவால் ஒரே நாளில் 5,880 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. காலை 8 மணி நேர நிலவரப்படி, நாட்டில் ஒரே நாளில் 5,880 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 35,199 ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 6.91 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 3.67 சதவீதமாகவும் உள்ளது.

கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14 பேர் உயிரிழந்ததையடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,30,979-ஐ தொட்டுள்ளது. டெல்லி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தலா நான்கு இறப்புகளும், குஜராத், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா ஒருவரும், கேரளாவில் இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன.இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 4,41,96,318 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.08% ஆகவும் குணமடைந்தோர் விகிதம் 98.73% ஆகவும், இறப்பு விகிதம் 1.19 ஆகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 205 டோஸ் வேக்சின்கள் போடப்பட்டன. நாடு முழுக்க இதுவரை மொத்தம் 220,66,23,527 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன,” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் மீண்டும் வேகமாக உயர தொடங்கும் கொரோனா.. ஒரே நாளில் 5,880 பேருக்கு வைரஸ் பாதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Delhi ,India ,Union ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...