×

அரியவகை ஆந்தை காயங்களுடன் மீட்பு

போடி, ஏப். 10: போடி பெரியாண்டவர் ஹைரோட்டில் உள்ள குப்பிநாயக்கன் பட்டியில் ஆலமரத்தில் காக்கை கூட்டங்களால் விரட்டப்பட்டு காயங்களுடன் இரண்டு கிலோ எடை கொண்ட ஈகிள் அவுல் என்ற ஆந்தை இனம் மரத்தில் ஒதுங்கி இருந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக போடி வனத்துறைக்கு தகவல் தெரிவித் தனர், சம்பவ இடம் விரைந்து வந்த வன த்துறையினர் காயமடைந்த கழுகு இனமான ஆந்தையை பிடித்து போடி கால் நடை மருத்துவமனையில் காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் உடனடியாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அதனை பறக்கவிட்டனர்.

The post அரியவகை ஆந்தை காயங்களுடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Kuppinayakkan Bardi ,Bodi Periyandavar High Road ,Dinakaran ,
× RELATED பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு