திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அருகே நாச்சியார்கோவில் பகுதியில் டாக்டர் சீட்டு இல்லாமல் மாத்திரை, ஊசி வழங்கிய மெடிக்கல் விற்பனையாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். திருவிடைமருதூர் அருகே முருக்கங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் டாக்டர்கள் நரேந்திரன், ஆனந்த் ஆகியோர் நேற்று நாச்சியார்கோவில் போலீசில் புகார் மனு அளித்தனர்.குச்சிபாளையத்தில் வசிக்கும் சாமிநாதன் மகன் சரவணன் (48) கூகூரில் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார்.முருக்கங்குடி மெயின் சாலையில் வசிக்கும் சீனிவாசன் மகன் ராஜு (45) அதே ஊரில் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார்.சரவணனும், ராஜூவும் இளங்கலை பட்டம் படித்துள்ளனர். ஆனால் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரை கொடுத்ததுடன் இன்சுலின் மற்றும் காய்ச்சலுக்கான ஊசியை போட்டுள்ளனர் என டாக்டர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து நாச்சியார்கோவில் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி, சப் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து மெடிக்கல்ஸ் விற்பனையாளர்கள் சரவணன், ராஜூ ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
The post நள்ளிரவு சிறப்பு வழிபாடு டாக்டர் சீட்டு இல்லாமல் மாத்திரை வழங்கிய மெடிக்கல் விற்பனையாளர்கள் கைது appeared first on Dinakaran.