×

தலையில் மரக்கிளை விழுந்து முதியவர் சாவு

கோவை, ஏப்.10: கோவை ஆர்.எஸ்.புரம் தியாகராய புதுத்தெருவில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதியம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென மரத்தின் கிளை முறிந்து அவரது தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்த நபர் யார், எந்த ஊர் என தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தலையில் மரக்கிளை விழுந்து முதியவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,RS ,Puram Thiagaraya Pudutheru ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...