×

108 வைணவ தலங்களில் ஒன்றான கல்யாண ரெங்கநாதர் கோயிலில் தெப்போற்சவம் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரியில் 108 திவ்யதேசங்களில் 37வது தலமான அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வார், குரசேகர ஆழ்வார் ஆகியோரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். திருமங்கை ஆழ்வார் அவதார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் பங்குனி மாத பெருவிழா உற்சவம் கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பன்னிரெண்டாம் நாள் திருவிழாவான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தெப்ப உற்சவத்தை முன்னிட்டு கோயிலில் அமிர்தவள்ளித் தாயார் சமேத கல்யாண ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள், தாயார், திருமங்கையாழ்வார் மற்றும் ராமானுஜர் சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். இதையடுத்து தெப்பம் 3 முறை பொய்கை புஷ்கரணி தீர்த்தக்குளத்தை வலம் வந்தது. அப்போது பல்லாயிர கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post 108 வைணவ தலங்களில் ஒன்றான கல்யாண ரெங்கநாதர் கோயிலில் தெப்போற்சவம் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Kalyana Renganatha Temple ,Sirkazhi ,Amritavalli ,Sametha ,Kalyanarenganath ,Temple ,Thirunagari ,Mayiladuthurai district ,
× RELATED சீர்காழி அருகே 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது