×

அரியப்பம்பாளையம் பேரூர் திமுக சார்பில் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம்

சத்தியமங்கலம், ஏப்.10: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அரியப்பம்பாளையம் பேரூர் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. பேரூர் கழக செயலாளர் வக்கீல் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். விழாவில் அரியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுபாஷ் என்பவருக்கு திமுக சார்பில் மூன்று சக்கர ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொருளாளர் ரமேஷ், துணைச் செயலாளர்கள் கனகராஜ், விஜயா மாரிமுத்து, மாதேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி துரைசாமி, வார்டு செயலாளர் முருகன், கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அரியப்பம்பாளையம் பேரூர் திமுக சார்பில் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம் appeared first on Dinakaran.

Tags : Ariyapambalayam Perur ,DMK ,Sathyamangalam ,Tamil Nadu ,Chief Minister ,M.K. ,Stalin ,Ariyapampalayam Perur ,Dinakaran ,
× RELATED தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க...