×

ஆசி பெற வந்த சிறுவனின் உதட்டில் தலாய் லாமா முத்தம்: வீடியோவால் சர்ச்சை

சண்டிகர்: திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமா தன்னிடம் ஆசி பெறவந்த சிறுவனின் உதட்டில் முத்தமிட்டு, நாக்கை வெளியே நீட்டியபடி இருக்கும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் எதிர்ப்பை மீறி, திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் தந்துள்ளது. இவர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். தன்னிடம் ஆசி பெற வந்த சிறுவன் ஒருவனின் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுள்ளார். மேலும் தனது நாக்கை நீட்டியபடியே, ‘என் நாக்கை சுவைக்கிறாயா?’ என கேட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி உள்ளன. பலரும் தலாய் லாமாவை கண்டித்துள்ளனர். ‘இந்த தவறான நடத்தையை நியாயப்படுத்த முடியாது?’, ‘அருவருப்பானது, தலாய் லாமாவை கைது செய்ய வேண்டும்’ என்றெல்லாம் கருத்து தெரிவிக்கின்றனர். முன்னதாக கடந்த 2019ல் ‘அடுத்த தலாய் லாமா ஒரு பெண்ணாக இருந்தால் அவர் கவர்ச்சியாக இருக்க வேண்டும்’ என தலாய் லாமா கூறியது கடும் சர்ச்சையானது. பின்னர் அதற்காக அவர் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

The post ஆசி பெற வந்த சிறுவனின் உதட்டில் தலாய் லாமா முத்தம்: வீடியோவால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Dalai Lama ,Chandigarh ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்