×

அண்ணியுடன் கணவன் உல்லாசம் வேதனையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை

சேலம்: அண்ணியுடன் கணவன் தகாத உறவால் மனம் உடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலத்தை அடுத்த பனமரத்துப்பட்டி நல்லியம்புதூர் காட்டுக்கொட்டாயைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(35). இவரது மனைவி பிரியா (28). 3 வயதில் மகனும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த பிப்ரவரி 13ம் தேதி, வீட்டில் பிரியா தூக்கில் சடலமாக தொங்கினார். அவரது பெற்றோர், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, பனமரத்துப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசாரும், சேலம் ஆர்டிஓ விஷ்ணுவர்த்தினியும் நடத்திய விசாரணையில் பிரியாவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஆறுமுகம் தான் காரணம் என தெரியவந்தது. கூலிவேலை பார்த்து வரும் ஆறுமுகம், அண்ணியுடன் தகாத உறவை வைத்திருந்தார்.

சம்பவத்தன்று அவரது அண்ணியுடன் உல்லாசமாக இருந்ததை பிரியா நேரில் பார்த்துள்ளார். இதுகுறித்து கணவனிடம் தட்டிக்கேட்ட போது, அவருடன் தகராறு செய்து விட்டு ஆறுமுகம் வெளியே சென்று விட்டார். இதனால் வேதனையடைந்த பிரியா, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர். இளம்பெண் தற்கொலை வழக்கில் 2 மாதத்திற்கு பின், தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அண்ணியுடன் கணவன் உல்லாசம் வேதனையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Salem ,Panamarathupatti ,Dinakaran ,
× RELATED வங்கியில் திருட முயன்ற பட்டதாரி வாலிபர் கைது