×

நிலக்கரி சுரங்க திட்டத்தில் ஒன்றிய அரசு நாடகம்: அன்புமணி குற்றச்சாட்டு

திருவண்ணாமலை: ‘நிலக்கரி சுரங்கம் திட்டத்தில் ஒன்றிய அரசின் நாடகம் நடக்கிறது’ என திருவண்ணாமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டினார். திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தனி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி, திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டம் 6,188 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. ஏலப்பட்டியலில் இருந்து மூன்று நிலக்கரி சுரங்கங்களையும் எடுத்துவிட்டதாக ஒன்றிய அமைச்சர் டிவிட் போடுகிறார். நிலக்கரி சுரங்கம் வராது என சொல்லவில்லை,. நாளை வேறு யாரவது நிலக்கரி சுரங்கத்தை எடுத்து நடத்தலாம்.

என்எல்சிகூட எடுத்து நடத்தலாம். இன்னும் ஏமாற்றம் என்று தான் சொல்லி வருகிறேன். இன்னும் ஆர்டர் கூட கையில் வரவில்லை. வெறும் டிவிட் மட்டும் தான் போட்டு இருக்கிறார். அங்கு நிலக்கரி சுரங்கம் வராது என்று ஒன்றிய அமைச்சர் அறிவிக்கவில்லை. இதில் ஒன்றிய அரசின் நாடகம் நடக்கிறது. நிலக்கரி சுரங்கம் மட்டுமல்ல, விவசாயத்திற்கு எதிராக எந்த ஒரு திட்டத்திற்கும் ஒரு சென்ட் நிலம் கூட கொடுக்க மாட்டோம் என்ற ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டில் 35 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் தேவை 18 ஆயிரம் மெகாவாட். ஆனால், என்எல்சி வெறும் 800 மெகாவாட்தான் உற்பத்தி செய்கிறது. அதற்காக, நம்முடைய நிலத்தை பிடுங்கி வளத்தை பாழாக்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post நிலக்கரி சுரங்க திட்டத்தில் ஒன்றிய அரசு நாடகம்: அன்புமணி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,Anbumani ,Thiruvannamalai ,BAMA ,Tiruvannamalai ,
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...