×

அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்

மரக்காணம்: மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில். இக்கோயில் திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக 7ம் தேதி இரவு காளி முகம் ஏந்துதல், முத்து பல்லக்குடன் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி மற்றும் மேடை நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தேர் திருவிழா நடைபெற்றது. அம்மன் சன்னதியில் இருந்து புறப்பட்ட தேர் ஊர்வலமாக சென்று மயானத்தை சென்றடைந்தது. அங்கு பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த கடலை ,பலா, மா போன்ற விவசாய பொருட்களை கொள்ளை விட்டனர். தொடர்ந்து பாவாடை ராயன் நிஷாசனி மற்றும் வல்லாளராயன் கோட்டையை அழித்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

The post அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Angalamman Temple Chariot Festival ,Marakanam ,Angalamman ,Anumanthai ,
× RELATED கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல்...