×

திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் பூத் கமிட்டி கூட்டம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றியத்தில் திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன், தொகுதி மேற்பார்வையாளரும் ஐ.டி பிரிவு மாநில துணை செயலாளருமான இலக்குவனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பகுதி செயலாளர்கள் உசிலை சிவா, கிருஷ்ணபாண்டி, மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் அறிவழகன், ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய பொருளாளர் பால்பாண்டி, இளைஞ்ரணி துணை அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ், நிர்வாகிகள் விளாச்சேரி குரும்பன், விமலா வைரமணி, முத்தரசு, தனக்கன்குளம் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய மாவட்ட செயலாளர் மணிமாறன், அதிக உறுப்பினர்களை சேர்க்கும் பகுதி மற்றும் ஒன்றியத்திற்கு 5 பவுன் தங்கமும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் பகுதி மற்றும் ஒன்றியத்திற்கு 10 பவுன் தங்கமும் பரிசாக வழங்கப்படும் என கூறினார்.

The post திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் பூத் கமிட்டி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirapparankuntham ,West Union Booth ,Tirapparankuram ,Tirapparankuram West Union ,Dishagam Booth Commission ,Tirapparankuntham West Union Dishagam ,Tirapparankunam Booth ,Ganagam ,Western Union ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் தங்க சங்கிலியை...