×

(வேலூர்) கோயில் உண்டியல் உடைத்து திருடிய 2 சிறார்கள் கைதுபணம், நகை மீட்புபொன்னை அருகே

பொன்னை, ஏப். 9: பொன்னை அடுத்த கீரைசாத்து ரேணுகாம்பாள் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு சம்பவத்தில் 2 சிறார்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம், நகை மீட்டனர். வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த கீரைசாத்து கிராமத்தில் ரேணுகாம்பாள் மாரியம்மன் கோயிலில் பூசாரியாக அதேபகுதியை சேர்ந்த இருசன்(75) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பகல் 1 மணி அளவில் கோயில் நடையை சாத்தி விட்டு மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் கோயில் நடை திறப்பதற்காக கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்ததை பார்த்த பூசாரி இருசன் உடனடியாக கிராம பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக பொன்னை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பெயரில் பொன்னை இன்ஸ்பெக்டர் தர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருடப்பட்ட கோயில் உண்டியல் கோயிலின் பின்பக்கமாக உள்ள ஏரியில் வீசப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர். இதன் பெயரில் விசாரணை மேற்கொண்டனர். பொன்னை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் நேற்று பொன்னை நான்கு ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 2 சிறார்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சேர்க்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் கீரை சாத்து ரேணுகாம்பாள் கோயிலில் உண்டியல் திருடி சென்ற பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றை வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்களிடமிருந்து பணம், நகை உள்ளிட்டவற்றை மீட்ட பொன்னை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் 2 சிறார்களை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

The post (வேலூர்) கோயில் உண்டியல் உடைத்து திருடிய 2 சிறார்கள் கைது
பணம், நகை மீட்பு
பொன்னை அருகே
appeared first on Dinakaran.

Tags : Velur ,Ponnai ,Keeraisathu Renukampal ,
× RELATED ஊராட்சி செயலாளர், மனைவி மீது சொத்து...