×

ரயில் பயணிகள் மீது தீவைத்த விவகாரம் தென் மாநிலத்தில் தாக்குதல் நடத்த திட்டம்: கைதான ஷாருக் பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த சம்பவத்தில் ைகது செய்யப்பட்ட ஷாருக்கு செய்பி தென்னகத்தின் ஏதாவது ஒரு மாநிலத்தில் சதி செயலை அரங்கேற்றும் எண்ணத்துடன் தான் வந்ததாக விசாரணையில் பரபரபபு தகவல் ெவளியாகியுள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழாவிலிருந்து கண்ணூரை நோக்கி கடந்த 2ம் தேதி இரவு சென்று கொண்டிருந்த எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலில், திடீரென ஒரு மர்ம நபர் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தான். இதில் 8 பயணிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. தீ பிடித்ததை பார்த்து பயந்து ஓடும் ரயிலில் இருந்து குதித்த கண்ணூரை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக ரா, ஐபி, என்ஐஏ ஆகிய மத்திய ஏஜென்சிகளுடன் கேரள போலீசார் இணைந்து நடத்திய விசாரணையில் அந்த மர்ம நபர் டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி (24) என தெரியவந்தது.
இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் வைத்து ஷாருக் செய்பி கைது செய்யப்பட்டான். ஷாருக்கை 11 நாள் காவலில் வைத்து விசாரிக்க கேரள போலீசுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கோழிக்கோட்டில் உள்ள போலீஸ் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட அவனிடம் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய விசாரணை நடைபெற்றது.

நேற்று பகலிலும் ஷாருக்கிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது. இதில் போலீசாருக்கு பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உட்பட ஏதாவது ஒரு தென்மாநிலத்தில் தாக்குதல் நடத்தவேண்டும் என்ற திட்டத்துடன் தான் ஷாருக் செய்பி டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளான். மும்பை சென்ற பின்னர் தற்செயலாக கேரளா செல்லும் ரயிலில் ஏறியுள்ளான். ஷொரணூர் ரயில் நிலையத்தில் இறங்கிய அவன் சுமார் 1.5 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பங்கில் 4 பாட்டில்களில் ெபட்ரோல் வாங்கி பேக்கில் வைத்துள்ளான்.

பின்னர் ஆலப்புழா – கண்ணூர் ரயிலில் ஏறி திட்டத்தை அரங்கேற்றியுள்ளான். பயணிகளுடன் சேர்த்து ரயில் பெட்டி முழுவதும் தீ வைக்க திட்டமிட்டிருந்தான். ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் சுதாரித்ததால் ஷாருக் செய்பி அங்கிருந்து தப்பி ஓடினான். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டி1, டி2 ரயில் பெட்டிகளை இணைக்கும் வழியில் அவன் பையை வைத்திருந்தான். பயணிகள் பயந்து ஓடும் போது பேக் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில் இருந்துதான் ஷாருக் செய்பி குறித்த முக்கிய விபரங்கள் போலீசாருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

The post ரயில் பயணிகள் மீது தீவைத்த விவகாரம் தென் மாநிலத்தில் தாக்குதல் நடத்த திட்டம்: கைதான ஷாருக் பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : southern ,Shahruk ,Thiruvananthapuram ,Kozhikott ,South South ,
× RELATED கேரள எல்லைக்குட்பட்ட கிளிகொல்லூர்...