×

கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி என்பதா? ஆளுநருக்கு சுப உதயகுமார் நோட்டீஸ்

நாகர்கோவில்: சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ‘ தென் மாவட்டத்தில் அணு உலை திட்டத்துக்கான வேலை தொடங்கும் போதெல்லாம் போராட்டங்கள் வெடித்தன. யாரும் பசி பட்டினியோடு நீண்ட காலம் போராட முடியாது. இது குறித்து ஆய்வு செய்தபோது போராட்டங்களுக்கு பின்னால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் பெரிய அளவில் நிதி வந்தது தெரியவந்தது’ என்று கூறியிருந்தார். இதற்கு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய ஆளுநருக்கு மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாயிலாக சுப உதயகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறப்பட்டதாக தாங்கள் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது, உங்களின் பழிச்சாட்டுதல் உண்மைக்கு புறம்பானது. அது அவதூறின் கீழ் வருகிறது. நீங்கள் தெரிவித்த கருத்துகளை திருத்த வேண்டும், இல்லையெனில் சட்ட தீர்வுகளை நாடுவோம்’ என தெரிவித்துள்ளார்.

The post கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி என்பதா? ஆளுநருக்கு சுப உதயகுமார் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Kedangulam ,Suba Udayakumar ,Nagargo ,Tamil Nadu ,Governor ,R.R. N.N. Ravi ,South District ,Kendangulam ,Subaudayakumar ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...