×

சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் பெலிண்டா

சார்ல்ஸ்டன்: கிரெடிட் ஒன் சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, சுவிஸ் நட்சத்திரம் பெலிண்டா பென்சிச் தகுதி பெற்றார். காலிறுதியில் ரஷ்யாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவா (28 வயது, 17வது ரேங்க்) உடன் மோதிய பெலிண்டா (26 வயது, 11வது ரேங்க்) 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 19 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா (29 வயது, 3வது ரேங்க்) 6-3, 7-6 (8-6) என்ற நேர் செட்களில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவை (25 வயது, 33வது ரேங்க்) வீழ்த்தினார். அரையிறுதியில் பெலிண்டா – பெகுலா மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவுடன் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் பலப்பரீட்சை நடத்துகிறார்.

The post சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் பெலிண்டா appeared first on Dinakaran.

Tags : Belinda ,Charleston Open ,Charleston ,Credit One ,Charleston Open tennis ,Dinakaran ,
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலின்ஸ் சாம்பியன்