×

மோசமாக ஆடை அணியும் பெண்கள் தெய்வங்கள் அல்ல அவர்கள் சூர்ப்பனகைகள்: பா.ஜ பொதுச்செயலாளர் சர்ச்சை பேச்சு

புதுடெல்லி: மோசமான ஆடை அணியும் பெண்கள் தெய்வங்கள் அல்ல. அவர்கள் சூர்ப்பனகைகள் என்று பா.ஜ பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்க்கியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அனுமன் ஜெயந்தி மற்றும் மகாவீர் ஜெயந்தி ஆகியவற்றை முன்னிட்டு நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ. பொது செயலாளர் விஜய் வர்க்கியா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நான் இரவில் வீட்டை விட்டு வெளியே போகும்போது, நன்றாக படித்த இளம்பெண்கள் போதை பொருளுக்கு அடிமையாக இருப்பதைப் பார்த்தேன். உடனே காரில் இருந்து இறங்கி, அவர்களது மது மயக்கம் தெளிவதற்காக, ஆறேழு முறை அவர்களது கன்னத்தில் நன்றாக அறைய வேண்டும் போன்ற உணர்வு ஏற்பட்டது.

கடவுள் மீது ஆணையாக இதைச்சொல்கிறேன். மேலும் பெண்களை நாம் தெய்வமாக நினைக்கிறோம். சில பெண்கள் மோசமான ஆடை அணிகிறார்கள். அவர்கள் சூர்ப்பனகை போல் இருக்கிறார்கள். கடவுள் உங்களுக்கு நல்ல உடலை கொடுத்திருக்கிறார். எனவே நல்ல ஆடைகளை அணியுங்கள். தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு நன்றாக கற்றுக்கொடுங்கள். நான் மிகவும் கவலையாக இருக்கிறேன். இவ்வாறு பேசிய அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

The post மோசமாக ஆடை அணியும் பெண்கள் தெய்வங்கள் அல்ல அவர்கள் சூர்ப்பனகைகள்: பா.ஜ பொதுச்செயலாளர் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,General Secretary ,NEW DELHI ,Kailash Vijayvargiya ,
× RELATED சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்: ஜோதி...