×

காங்கிரசில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன் பா.ஜவில் இணைந்தார்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன் பா.ஜவில் இணைந்தார். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர் சி. ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். கடந்த 2001ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி மையத்தின் துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்தார். இந்தநிலையில் கடந்த பிப்ரவரி 23ந்தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பினார். இந்நிலையில் நேற்று அவர் டெல்லியில் பா.ஜவில் இணைந்தார். ஒன்றிய அமைச்சர் விகே.சிங், பா.ஜ தேசிய செய்தி தொடர்பாளர் அனில் பலூனி முன்னிலையில் கட்சியில் இணைந்த அவருக்கு பா.ஜ அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இதுகுறித்து பிஆர் கேசவன் கூறுகையில், ‘மக்களை மையமாகக் கொண்ட பிரதமர் மோடியின் கொள்கைகள், ஊழலற்ற, அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் என்னை ஈர்த்தது. ’ என்று தெரிவித்தார்.

ஒன்றிய அமைச்சர் விகே சிங் கூறுகையில், ‘நாட்டின் சுதந்திரத்திற்கு ராஜகோபாலாச்சாரியின் பங்களிப்பு மறக்க முடியாது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு அவர் ஒதுக்கப்பட்டார் இனிவரும் காலங்களில் பா.ஜவிலும், தமிழ்நாடு அரசியலிலும் வலுவான குரலாக கேசவன் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

The post காங்கிரசில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன் பா.ஜவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : Kesavan Ba ,Congress ,Javille ,New Delhi ,Kesavan Pa ,Rajaji ,Congress party ,India ,Kesavan ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...