×

அமைச்சர் மெய்யநாதன் பேட்டி ஆறு, ஏரிகளில் கழிவுநீர் கலப்பு தடுக்க நடவடிக்கை

தஞ்சை: தஞ்சையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒலிம்பிக் போட்டி உட்பட விளையாட்டு போட்டிகளில் வீரர்கள் பங்கேற்பதற்கு அவர்களின் தகுதிக்கேற்ப வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்புறத்தில் உள்ள திறமையான இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளித்து சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதே முதல்வரின் நோக்கம். ஊட்டியில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மையத்தை 40 ஏக்கர் பரப்பில் அமைப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பது குறித்து ஐஐடி குழு, தமிழகத்தில் 22 இடங்களில் நீர் மாதிரிகள் சேகரித்துள்ளது. காவிரி நீரில் மருத்துவ கழிவுகள் கலப்பதை தடுத்து சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஐஐடி குழு கொடுத்த அறிக்கையின் மீது முதல்வர் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் ஆறு, ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்….

The post அமைச்சர் மெய்யநாதன் பேட்டி ஆறு, ஏரிகளில் கழிவுநீர் கலப்பு தடுக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister ,Maianathan ,Thanjai ,Tamil ,Nadu ,Environment ,Sports ,Maiyanathan ,Olympic Games ,
× RELATED தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி...