×

ஹைவேவிஸில் கொளுத்துது வெயிலு; தாகம் தீர்க்க நீர்நிலைகளை தேடி வரும் வனவிலங்குகள்: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே, ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலார், மேல்மணலார், வெண்ணியர், மகாராஜன்மெட்டு, இரவங்லார் உள்ளிட்ட 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 8,500 பேர் வசிக்கின்றனர். இங்கு பணப்பயிர்களான ஏலம், காப்பி, மிளகு, தேயிலை ஆகியவை பயிரிடப்படுகின்றன. இங்குள்ள வனப்பகுதியில் யானை கூட்டங்கள், சிறுத்தை புலி, வரிப்புலி, காட்டுக்குதிரை, கரடி, காட்டு மாடுகள், காட்டுப்பன்றி கள், அரிய வகை பாம்பு இனங்கள், சிங்கவால் குரங்குகள் மற்றும் பல வகையான பறவை இனங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், தற்போது வெயில் கொளுத்தி வருவதால், வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து நீர்நிலைகளை தேடி வருகின்றன. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஹைவேவிஸ், தூவானம், வெண்ணியார், மணலார், இரவங்கலார் ஏரி மற்றும் அணைகளுக்குள் இறங்கி தண்ணீர் குடிக்கின்றன. குறிப்பாக யானைகள் வெண்ணியாறு அணையில் ஒற்றையாகவும், கூட்டமாகவும் அடிக்கடி வந்து தாகம் தீர்த்து செல்கின்றன. எனவே, பொதுமக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

The post ஹைவேவிஸில் கொளுத்துது வெயிலு; தாகம் தீர்க்க நீர்நிலைகளை தேடி வரும் வனவிலங்குகள்: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Highwavis ,Chinnamanur ,Theni district ,Highavis Municipality ,Megamalai ,Manalar ,Melmanalar ,Vanniyar ,Maharajanmetu ,Irvanglar ,7 ,
× RELATED தேனி மாவட்டம்; வெறிநாய் கடித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்!