×

மாநில சட்டப்பேரவையில் நிறைவேறும் மசோதா மீது முடிவு எடுக்க அரசமைப்பின் 200-வது விதிப்படி 3 வாய்ப்புகள் உள்ளன: ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை: மாநில சட்டப்பேரவையில் நிறைவேறும் மசோதா மீது முடிவு எடுக்க அரசமைப்பின் 200-வது விதிப்படி 3 வாய்ப்புகள் உள்ளன: ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 1. மசோதா சரியாக இருந்தால் ஒப்புதல் தரலாம், 2. சரியாக இல்லையென்றால் நிறுத்திவைக்கலாம். 3. மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஆளுநருக்கு 2 வாய்ப்புகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிபடுத்தி உள்ளது. ஒன்றிய அரசு இயற்றிய சட்டத்துக்கு இணையாக மாநில அரசு மசோதா நிறைவேற்றினால் அதை ஜனாதிபதியே முடிவு எடுப்பார். குடியரசுத் தலைவர் மசோதா மீது முடிவு எடுக்க 2 வாய்ப்புகளை பயன்படுத்தலாம் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

The post மாநில சட்டப்பேரவையில் நிறைவேறும் மசோதா மீது முடிவு எடுக்க அரசமைப்பின் 200-வது விதிப்படி 3 வாய்ப்புகள் உள்ளன: ஆளுநர் மாளிகை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Governor House ,Chennai ,Governor ,Dinakaran ,
× RELATED ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது