×

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது

சென்னை: காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்மநபர், ஆளுநர் மாளிகையில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் சோதனையிடப்பட்டது. பின்னர் அது வதந்தி என தெரிந்தது. இதுதொடர்பாக சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பது தெரியவந்தது. நேற்று அவர் கைது செய்யப்பட்டார். , தேவராஜ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவரது உறவினர்களிடமும் விசாரிக்கின்றனர்.

The post ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Governor's House ,Chennai ,Governor ,House ,Chennai Cyber Crime Police ,
× RELATED ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள்...