தேவகோட்டை, ஏப்.7: தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் பங்குனி உற்சவ இறுதி நாளான நேற்று மாலை மஞ்சுவிரட்டு நடைபெற்றது, இதில் சிவகங்கை,ராமநாதபுரம்,மதுரை, தேனி என பல்வேறு மாவட்டப் பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. 50 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர், முன்னதாக காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களை பரிசோதனை செய்த பின் மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தேவகோட்டை ஆர்டிஓ பால்துரை தலைமையில் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறி பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர். வயல்வெளிகளில் 50க்கும் மேற்பட்ட கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடு முட்டியதில் 35 வீரர்கள் சிறு காயம் அடைந்தனர். 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மாடுபிடி வீரர்களை முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேவகோட்டை டிஎஸ்பி.பார்த்திபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post தேவகோட்டை அருகே மஞ்சுவிரட்டில் 35 பேர் காயம் appeared first on Dinakaran.