×

மழை கைவிட்டதால் மிளகாய் சாகுபடி பாதிப்பு

இளையான்குடி,ஏப்.7: இளையான்குடி வட்டாரத்தில் நடப்பாண்டில் சாலைக்கிராமம், சூராணம், அளவிடங்கான், சாத்தனூர், சமுத்திரம் கோட்டையூர், கல்வெளிப்பொட்டல், கரும்பு கூட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விதைக்கப்பட்ட மிளகாய் விதைகள், போதிய மழை இல்லாததால் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் பாய்ச்சி மிளகாய் செடிகளை விவசாயிகள் பாதுகாத்து வளர்த்து வந்த நிலையில்,இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மிளகாய் பழங்கள் பறிக்கப்பட்டது.

செழித்து வளர்வதற்கும், பூ,காய்கள் இறங்குவதற்கும் மேல் மழை பெய்யாததால், தற்போது மிளகாய் செடிகள் காய்க்கும் திறன் பருவம் குறைந்து இறுதிகட்ட நிலையில் உள்ளது. போதிய அளவு மழை பெய்தால் ஏக்கருக்கு 20 முதல் 30 மூட்டை மிளகாய் பழங்கள் பறிக்கப்படும். ஆனால் தற்போது மழையில்லாமல் கடும் வெப்பம் காரணமாக ஏக்கருக்கு அதிகபட்சம் 10 மூட்டை கிடைப்பதே அரிதாக உள்ளது. மேலும் மழை இல்லாததால், குறைந்த அளவு மிளகாய் சாகுபடி, தொடர் விலை வீழ்ச்சி இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக இளையான்குடி வட்டார மிளகாய் விவசாயிகள் தெரிவித்தனர்.

The post மழை கைவிட்டதால் மிளகாய் சாகுபடி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Ilayayankudi ,Saligram ,Suranam ,Kulankan ,Chatanur ,Samudram ,Kotdaiyur ,Kalveyapotal ,Karumbu Kutam ,Dinakaran ,
× RELATED சூராணத்தில் நோய் பாதித்த நாய்கள் அதிகரிப்பு