×

கறம்பக்குடியில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

கறம்பக்குடி,ஏப்.7: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திமுக நகர சார்பில் 9வது வார்டு பகுதியில் உள்ள அக்ரகாரம் பகுதியில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே செல்லபாண்டியன் கலந்து கொண்டு தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கறம்பக்குடி திமுக நகர செயலாளர் முருகேசன் மற்றும் 9வது வார்டு பகுதி கவுன்சிலர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு தொகுதி மேற்பார்வையாளர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டு விளக்கி கூறி, அதன் செயல்பாடுகள் பற்றி எடுத்து கூறி, சேர்க்கை படிவங்களை நகர செயலாளர் முருகேசனிடம் வழங்கினார். இதில் பொதுமக்கள், பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு திமுகவில் புதிய உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 9வது வார்டு பகுதியை சேர்ந்த திமுகவினர் மற்றும் நகர கழகத்தினர், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர் புற உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கறம்பக்குடியில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Karambakudi ,Pudukottai District ,Karambakudi DMK City ,Karambakudi District 9th Ward Area Agrakaram Area ,Dinakaran ,
× RELATED டயர் வெடித்ததால் சென்டர் மீடியனில் மோதிய தனியார் பஸ்