×

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் 1,948 குடும்ப அட்டைதாரர்கள் பயன்

மயிலாடுதுறை,ஏப்.7: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் 1,948 குடும்ப அட்டைதார்கள் பயன்பெற்றுள்ளனர் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம்பந்தல் (பால் பண்ணை அருகில்) புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தொடர்பாக வெளி மாநில தொழிலாளருக்கான விழிப்புணர்வு முகாமை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் என்பது அதே கிராமம் மற்றும் வார்டு தவிர பிற நியாயவிலைக் கடைகளில் தங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளவழி வகை செய்யும் ஒரு திட்டம் ஆகும். இத்திட்டம் மாநிலங்களுக்கிடையிலான பரிவர்த்தளை மற்றும் ஒரு மாநிலத்திற்கு உள்ளேயே நடைபெறும் பரிவர்த்தனை என்ற இரண்டு வகைகளில் மேற்கொள்ளப்படும் திட்டம் ஆகும்.

இத்திட்டத்தின்படி பொருட்களைப் பெற நியாய விலைக்கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்கான பொருட்களை கைவிரல் ரேகை படிப்பி அங்கீகரித்தல் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு விநியோகம் செய்யும் போது தமிழ்நாட்டில் மாநிலத்திற்கு உள்ளேயே நடைபெறும் பரிவர்த்தனைக்கு அரிசி மற்றும் கோதுமை விலையின்றியும், மாநிலங்களுக்கிடையிலான பரிவர்த்தனைக்கு இந்திய அரசால் நிர்ணயிக்கப்ட்ட விலையான அரிசி 1 கிலோ ரூ.3, கோதுமை 1 கிலோ ரூ.2 எனவும் தொகை வசூல் செய்யப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் தங்களுக்கான உரிம பொருட்களை பெற தங்களது உறவினர்கள், தெரிந்தவர்களை நியமித்து பொருட்களை பெற ஏதுவாக உரிய படிவத்தில் அந்நபர்களுக்கான விவரங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் அளிக்க வேண்டும்.

அவ்வாறு பெறப்படும் மனுக்களை சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவார். உதவி ஆணையாளர் அலுவலகத்தில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதன்படி அந்நபர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் பெறப்படும். ஒரு முறை கடவுச் சொல் மூலம் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு வயது முதிர்ந்தோர் மாற்றுத்திறனாளிகளுக்காக அவர்களால் நியமனம் செய்யப்படும் நபர்களிடம் வழங்கப்படும் பொருட்களுக்கு தனியே பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ மாவட்டங்களுக்கிடையிலான பரிவரத்தனையாக மார்ச் 2023 வரை 1,948 குடும்ப அட்டைதாரர்கள் பயடந்துள்ளனர்.

மாநிலங்களுக்கிடையிலான பரிவர்த்தனையாக மார்ச் 2023 வரை இரண்டு குடும்ப அட்டைடதாரர்களும் பயனடைந்துள்ளனர். இச்சிறப்பான திட்டத்தினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் முதல் விற்பனை நாளில் இருந்தே குடும்ப அட்டைதாரர்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை விரல் பதிவு மூலம் வீற்பனை செய்ய அனைத்து விற்பனையாளருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நியாய விலைக் கடைகளில் பொருட்களின் இருப்பினை கண்காணித்து. போதுமான அளவில் இருப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறும், எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல்’ இத்திட்டம் சிறப்பாக செயல்பட உரிய நடவடிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் டிஆர்ஓ முருகதாஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பால ரவிக்குமார், துணை பதிவாளர் கூட்டுறவு ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

The post ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் 1,948 குடும்ப அட்டைதாரர்கள் பயன் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Mayladuthurai ,Dinakaran ,
× RELATED வெயிலின் கொடுமை நாளுக்கு நாள்...