×

சூட்டிங்மட்டம் பகுதியில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி, ஏப். 7: சூட்டிங் மட்டம் பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுதால், வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
ஊட்டியில் இருந்து கர்நாடகம், கேரள மாநிலங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக கூடலூர் செல்லும் சாலை உள்ளது. எந்நேரமும் இச்சாலையில் வாகன போக்குவரத்து இருந்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக, கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகன போக்குவரத்து இருந்துக் கொண்டே இருக்கும். இந்நிலையில், இச்சாலையோரத்தில் 10வது மைல் பகுதியில் சூட்டிங்மட்டம் பகுதி உள்ளது.

இங்குள்ள இயற்கை அழகை காண நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி போதிய பார்க்கிங் வசதிகள் இல்லாத நிலையில் சாலையோரங்களிலேயே நிறுத்துகின்றனர். சிறிய வாகனங்கள் முதல் பெரிய பஸ்கள் வரை சாலையோரங்களில் நிறுத்துகின்றனர். இதனால், இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் தடை ஏற்பட்டு வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சூட்டிங்மட்டம் பகுதிக்கு செல்கின்றனர். அங்கு வாகனங்களை நிறுத்த இடம் இல்லாத நிலையில் சாலையோரத்தில் நிறுத்துகின்றனர். இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன நெரில் மற்றும் தடையால் மூன்று மாநில சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கின்றனர். எனவே, சூட்டிங்மட்டம் பகுதியில் சாலையில் வானங்கள் நிறுத்தாமல் இருக்கவும், அதேசமயம் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த போதுமான பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post சூட்டிங்மட்டம் பகுதியில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Suttingamatam ,Sutting ,Madam ,
× RELATED சென்னை சத்யம் திரையரங்கில்...