×

பள்ளி மாணவன் பாம்பு கடித்து சாவு

கோபி, ஏப்.7: கோபி அருகே உள்ள கூடக்கரை குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம், இவருக்கு அம்பிகா என்ற மனைவியும் நதின், கௌஷிக் (9) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். நதின் கூடக்கரை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 ம் வகுப்பும், கௌஷிக் அதே பள்ளியில் 4 ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் கவுசிக்கை வீட்டிலேயே பாம்பு கடித்துள்ளது.

உடனடியாக பெற்றோர்கள் கொடிவேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கௌசிக்கை கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்துள்ளனர். பின்னர் கௌசிக்கை கோவைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சை வரவழைத்தனர். ஆனால் அதற்குள் கௌஷிக் உயிரிழந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பள்ளி மாணவன் பாம்பு கடித்து சாவு appeared first on Dinakaran.

Tags : Gobi ,Gemm ,Kotakkara Kumaran Nagar ,Ambika ,
× RELATED கோபி அருகே கோயில் திருவிழாவில்...