×

வீடு, கட்டிடங்களில் டெங்கு கொசு இருந்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம்: திருவள்ளூர் நகராட்சி எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசுப்புழு வளரும் இடங்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். அதன்படி வீடுகளுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரையிலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.500 முதல் ரூ.15 ஆயிரமும், குறு, சிறு கடைகளுக்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரமும், ஆயிரம் மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரமும், ஓட்டல்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரமும், வணிக வளாகம், அரசு கட்டிடங்கள், தொழிற்சாலைகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையில் அபராதமும் விதிக்கப்படும். இதேபோல், ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சமும், 5 ஆயிரம் சதுர அடிக்கு குறைவான கட்டுமான இடங்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரமும், 50 படுக்கைகளுக்கு கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சமும், 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கட்டுமான இடங்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்….

The post வீடு, கட்டிடங்களில் டெங்கு கொசு இருந்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம்: திருவள்ளூர் நகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur Municipal Warning ,Thiruvallur ,Thiruvallur Municipal Commission ,Sandanam ,Thiruvallur municipal ,
× RELATED டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில்...