×

3500 வாழை மரங்கள் சாய்ந்து நாசம்

இடைப்பாடி, ஏப்.7: இடைப்பாடி அருகே பலத்த காற்று மழைக்கு 3500 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தது. அதனை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே தேவூர் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பாளையம், பாலிருச்சம்பாளையம், சுண்ணாம்புகரட்டூர், கைகோலபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், புதுப்பாளையம் பகுதியில் தனியார் தோட்டத்தில் 3500 செவ்வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது. மேலும், அண்ணமார் கோயில் ராணா தோட்டம் சாலையில் பழமையான மரம் உடைந்து விழுந்தது. கைகோலபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் பழமையான மரம் ஒன்று சாய்ந்தது. அண்ணமார் கோயில் சாலையில் மூன்று மரங்கள் சாலையில் சாய்ந்தது. இதையடுத்து, இரவோடு இரவாக மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. இதேபோல், பல்வேறு இடங்களில் சாலைகளிலும், விவசாய நிலங்களிலும் ஆங்காங்கே மரங்கள் அடியோடு உடைந்து விழுந்தன. இதுகுறித்து தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் பிரதீப்குமார், சங்ககிரி தோட்டக்கலை துறை அலுவலர் ராஜா உள்ளிட்ட தோட்டக்கலைத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post 3500 வாழை மரங்கள் சாய்ந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Eadpadi ,Dinakaran ,
× RELATED பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில்...