×

மாவட்டத்தில் 19,504 மாணவ, மாணவிகள் எழுதினர்

நாமக்கல், ஏப்.7: நாமக்கல் மாவட்டத்தில், எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வினை 19504 பேர் எழுதினார்கள். 384 பேர் ஆப்சென்ட் ஆகினர். தமிழ்த்தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி அரசுபொதுத்தேர்வு நேற்று துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வு நேற்று 94 மையங்களில் நடைபெற்றது. இந்த மையங்களில் 300 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 504 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். நேற்று தமிழ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத 344 மாணவ, மாணவிகள் வரவில்லை. இது போல தனித்தேர்வர்கள் 308 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வினை எழுதினர். 40 பேர் தேர்வு எழுதவரவில்லை. காலை 10 மணிக்கு தேர்வுகள் துவங்கி 1.15 மணிக்கு முடிவடைந்தது.

அனைத்து மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் காலை 9 மணிக்குள் வினாத்தாள் கொண்டு செல்லப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தனித்தேர்வர்களுக்காக 2 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு கண்காணிப்பு பணியில், 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 94 துறை அலுவலர்கள், ஒரு கூடுதல் துறை அலுவலர், 20 வழித்தட அலுவலர்கள், 9 கட்டுகாப்பாளர்கள், 1731 அறைகண்காணிப்பாளர்கள் என மொத்தம் 1949 பேர் ஈடுபட்டனர். எஸ்எஸ்எல்சி தேர்வினையொட்டி மாவட்ட கல்வி அலுவலகத்தில், கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 2 மூத்த தலைமை ஆசியர்கள் மற்றும் 2 மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைத்து மையங்களுக்கும் வினாத்தாள் செல்வதை உறுதி செய்தல், தேர்வு எழுதவராத மாணவ, மாணவியரின் விபரங்களை சேகரித்தல்போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

நேற்று நடைபெற்ற தமிழ்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் எளிமையாக இருந்ததது. பெரும்பாலான கேள்விகள் பாட புத்தகத்தில் உள்ள வினாக்களின் அடிப்படையில் கேட்கப்பட்டிருந்தது என தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ,மாணவியர் தெரிவித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவி, கணேசன் ஆகியோர் பல்வேறு மையங்களுக்கு சென்று மாணவ,மாணவியர் தேர்வு எழுதுவதை பார்வையிட்டனர். அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவியருக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இணை இயக்குனருக்கு பாராட்டு
நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13, 14ம் தேதிகளில் துவங்கி கடந்த 5ம் தேதி முடிவடைந்தது. பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முந்தைய ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் சார்ந்த கூட்டம் முதன்மை கண்காணிப்பாளர்கள் துறை அலுவலர்களுக்கான அறிவுரை சார்ந்த கூட்டம் உள்ளிட்ட அனைத்திலும், மிகவும் இயல்பாகவும், எளிமையாகவும் இணை இயக்குனர் நடத்தினார். களச் சூழல்கள் அடிப்படையிலும், நாமக்கல் மாவட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அவர் வழங்கினார். இதனால், மாவட்டத்தில் மிக மிக அமைதியாக எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தாமல் அமைதியாக தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. மாவட்டத்தில் தேர்வு பணி தொடங்கிய நாள் முதல், தேர்வு பணி நிறைவடைந்த நாள் முதல் ஆசிரியர்களை ஆசிரியர்களாக இணை இயக்குனர் மதித்து தேர்வு பணிகளை செய்யவைத்தார். இதற்காக அனைத்து ஆசிரியர்கள் சார்பில் இணை இயக்குனருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என ராமு தெரிவித்துள்ளார்.

The post மாவட்டத்தில் 19,504 மாணவ, மாணவிகள் எழுதினர் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,SSLC Govt ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...