×

தனியார் பஸ்சில் கழுத்தை அறுத்து தம்பியின் மனைவியை கொன்ற அண்ணன்

கோபால்பட்டி: திண்டுக்கல் அருகே பஸ்சில் வந்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உலுப்பக்குடியில் இருந்து திண்டுக்கல்லுக்கு நேற்று மாலை தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் கணவாய்பட்டியை சேர்ந்த கோபி மனைவி தமயந்தி(45) வந்தார். அதே பஸ்சில் அவரது கணவரின் அண்ணன் ராஜாங்கமும் வந்துள்ளார். சாணார்பட்டி அருகே கோபால்பட்டி பெட்ரோல் பங்க் எதிரே பயணிகளை இறக்கி விட பஸ் நின்றது. அப்போது ராஜாங்கம் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமயந்தியின் கழுத்தை அறுத்தும், குத்தியும் கொலை செய்து விட்டு பஸ்சில் இருந்து இறங்கி தப்பிவிட்டார். பஸ்சில் இருந்த பயணிகள் இதை பார்த்து அலறினர். புகாரின்படி சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிந்து சொத்து பிரச்னையில் பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரிக்கின்றனர்.

The post தனியார் பஸ்சில் கழுத்தை அறுத்து தம்பியின் மனைவியை கொன்ற அண்ணன் appeared first on Dinakaran.

Tags : Gopalpatti ,Dindigul ,Uluppakkudi ,Natham, Dindigul district ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை