×

பால் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க பரிசீலனை: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திருத்தணி எஸ்.சந்திரன் (திமுக) கேட்ட கேள்விகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அளித்த பதில் வருமாறு: திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 900 லிட்டர் அளவிற்குதான் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 3000 லிட்டர் கொள்முதல் இருந்தால்தான் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க முடியும். பள்ளிப்பட்டு வட்டத்தில் தற்போது 5 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சராசரியாக நாளொன்றுக்கு 200 லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு அருகிலுள்ள கே.ஜி.கண்டிகை தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்திற்கு அனுப்பப்படுகிறது. பள்ளிப்பட்டு வட்டத்தில் பால் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் அங்கு தொகுப்பு குளிரூட்டும் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

The post பால் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க பரிசீலனை: அமைச்சர் சா.மு.நாசர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister SW ,Nassar ,Editani S. Moon ,Dishaghagam ,Dishagar ,Minister ,b.k. ,Sa. b.k. ,
× RELATED தென்னிந்திய நடிகர் சங்க கட்டத்திற்கு...