×

டெல்லி துணை சேவைகள்தேர்வு வாரியத்தில் 258 இடங்கள்

புதுடெல்லி துணை சேவைகள் தேர்வு வாரியத்தில் (Delhi Subordinates Services Selection Board) 258 இடங்கள் காலியாக உள்ளன. ஐடிஐ/ டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:

  1. Instructor Millwright: 7 இடங்கள். சம்பளம்: ரூ.35,400- 1,12,400. வயது: 30க்குள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ முடித்து 2 வருடங்கள் ஆசிரியர் பணி அனுபவம்.
  2. Technical Assistant (Junior): 2 இடங்கள். சம்பளம்: ரூ.35,400-1,12,400. வயது: 30க்குள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ முடித்து 2 வருட ஆசிரியர் அனுபவம்.
  3. Maintenance Mechanic: 1 இடம். சம்பளம்: ரூ.35,400-1,12,400. வயது: 30க்குள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ முடித்து 2 வருட ஆசிரியர் அனுபவம்.
  4. Craft Instructor: 159 இடங்கள். சம்பளம்: ரூ.35,400-1,12,400. வயது: 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிராப்ட்ஸ்மேன் சிவில்/ மோட்டார் மெக்கானிக்/ பிட்டர்/எலக்ட்ரீசியன்/ ஏசி டெக்னீசியன்/ பேஷன் டிசைனிங்/ கோபா/ ஷூவிங் டெக்னாலஜி/ உணவு உற்பத்தி/எலக்ட்ரானிக் மெக்கானிக்/ டர்னர்/மிஷினிஸ்ட்/ காஸ்மடாலஜி ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ். மேலும் சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவில் 3 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம்.
  5. Employability Skills Instructor: 18 இடங்கள் சம்பளம்: ரூ.35,400- 1,12,400/- வயது: 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Business Administration/Economics/Sociology/Social Welfare ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பை முடித்து 2 வருட ஆசிரியர் பணி அனுபவம்.
  6. Workshop Calculation and Science Instructor: 26 இடங்கள். சம்பளம்: ரூ.35,400-1,12,400. வயது: 30க்குள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., அல்லது டிப்ளமோ. பி.இ., படித்தவர்கள் ஒரு வருட பணி அனுபவமும், டிப்ளமோ முடித்தவர்கள் 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
  7. Workshop Attendant: 45 இடங்கள். சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவது ஒரு பாடத்தில் ஐடிஐ.

கட்டணம்: ரூ.100. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
இடஒதுக்கீட்டு, வயது சலுகை விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். www.dsssbonline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.04.2023.

The post டெல்லி துணை சேவைகள்
தேர்வு வாரியத்தில் 258 இடங்கள்
appeared first on Dinakaran.

Tags : Delhi Auxiliary ServicesEfficiency Board ,New Delhi Subordinates Services Selection Board ,Delhi Subordinates Services Selection Board ,IDI/ ,Delhi Subsidiary ServicesPerformance Board ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ்...