×

கெயில் நிறுவனத்தில் 120 இடங்கள்

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 120 இடங்களுக்கு பி.இ.,/ டிப்ளமோ/ எம்பிஏ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்
:
i) Senior Associate (Technical): 72 இடங்கள் (பொது-31, பொருளாதார பிற்பட்டோர்-7, ஒபிசி-19, எஸ்சி-10, எஸ்டி-5). சம்பளம்: ரூ.60,000. வயது: 32க்குள். தகுதி: Electrical/Electrical அண்ட் Electronics/Mechanical/Production/Production அண்ட் Industrial Manufacturing/Automobile/Instrumentation/Civil Engineering பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம்.

ii) Senior Associate (Fire & Safety): 12 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-1). சம்பளம்: ரூ.60,000. வயது: 32க்குள். தகுதி: Fire & Safety Engineering பாடத்தில் குறைந்த பட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம்.

iii) Senior Associate (Marketing): 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1). சம்பளம்: ரூ.60,000. வயது: 32க்குள். தகுதி: Marketing/Petroleum அண்ட் Energy/International Business/ Oil அண்ட் Gas/Petroleum and Infrastructure ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம்.

iv) Senior Associtate (Finance அண்ட் Accounts): 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1). சம்பளம்: ரூ.60,000. வயது: 32க்குள். தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ// எம்பிஏ (நிதி) பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம்.

v). Senior Associate (Company Secretary): 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.60,000. வயது: 32க்குள். தகுதி: Company Secretary படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம்.

vi) Senior Associate (HR): 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1). சம்பளம்: ரூ.60,000. வயது: 32க்குள். தகுதி: Personnel Management/Industrial Relations/HR/ Social Work ஆகிய ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டம் அல்லது ஏதேனும் ஒரு முதுநிலை படிப்புடன் முதுநிலை டிப்ளமோ. 2 வருட பணி அனுபவம்.

vii) Junior Associate : 16 இடங்கள் (பொது-8, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ.40,000. வயது: 32க்குள். தகுதி: Electrical/Electrical அண்ட் Electronics/Mechanical/Production/Production அண்ட் Industrial/Manufacturing/Mechanical அண்ட் Automobile/Instrumentation/Instrumentation அண்ட் Control/Electronics & Instrumentation/Electrical & Instrumentation/Electronics/Civil ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு ரூ.100/- (எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எழுத்துத்தேர்வு, தொழிற் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.gailgas.com/careers என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 10.04.2023

The post கெயில் நிறுவனத்தில் 120 இடங்கள் appeared first on Dinakaran.

Tags : GAIL ,Union Government ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...