×

எம்.ஆர்.பட்டினம் ஊராட்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தொண்டி, ஏப்.6: தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினம் ஊராட்சி நடுநிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், தொண்டி பேரூராட்சி கவுன்சிலர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தங்கள் குழந்தைகள் செய்து காட்டிய அறிவியல் சோதனைகளை பெற்றோர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். வானவில் கருத்தாளர் சிங்கேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டனர். அருகேயுள்ள பள்ளியான கொடிப்பங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணிக்கம் மரக்கன்றுகளை வழங்கினார்.

The post எம்.ஆர்.பட்டினம் ஊராட்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Science Fair ,MR Pattinam Panchayat School ,Thondi ,MR Pattinam Panchayat Middle School ,MR Pattinam Panchayat School Science Exhibition ,Dinakaran ,
× RELATED அறிவியல் கண்காட்சி