×

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிந்தது- மாணவர்கள் குஷி

கோவை, ஏப். 6: தமிழகத்தில் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 14-ம் தேதி துவங்கியது. இந்நிலையில், நேற்றுடன் தேர்வு நிறைவடைந்தது. இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் 362 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் என மொத்தம் 34 ஆயிரம் பேர் பங்கேற்று எழுதினர். தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை கண்காணிக்கும் வகையில் 180 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு இருந்தது. இவர்கள், தேர்வு மையங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும், நடந்து முடிந்த பிளஸ்-1 தேர்வுகளில் மொழிப்பாடத்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்வுகளில் எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நேற்றுடன் பிளஸ்-1 மாணவர்களுக்கான தேர்வு முடிந்ததை அடுத்து, மாணவ, மாணவிகள் ஒருவர் மீது ஒருவர் பேனா இங்க் அடித்தும், பேப்பர்களை தூக்கி வீசியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தவிர, பலர் மொபைலில் செல்பி எடுத்துக்கொண்டனர்.

The post பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிந்தது- மாணவர்கள் குஷி appeared first on Dinakaran.

Tags : Khushi ,Coimbatore ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோவை மாவட்டத்தில் வெப்ப அலை...