×

சிறு, குறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை ஈரோட்டில் புதிய இணைப்பு சாலை திட்டம்: வரி செலுத்துவோர் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, ஏப். 6: ஈரோட்டில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், புதிய இணைப்பு சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வரி செலுத்துவோர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் என்பது தீர்க்க முடியாத பிரச்னையாக இருந்து வருகிறது. ரிங் ரோடு, 2 புதிய பஸ் ஸ்டாண்டுகள், மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக விரிவாக்கம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனிடையே ஈரோடு பவானி சாலை மற்றும் ஈரோடு சேலம் சாலை இணைப்பு சாலைகள் எதுவும் இன்றி அதிக நெரிசல் மிகுந்த சாலைகளாக உள்ளது. இந்த சாலைகளில் ஏதாவது இடர்பாடுகள் ஏற்படும்போது மாற்றுச்சாலைகள் எதுவும் இல்லாமல் வாகனங்கள் பல கிமீ தூரத்திற்கு சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு பகுதிகளில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளான ஈரோடு பவானி மற்றும் ஈரோடு பள்ளிபாளையம் நெடுஞ்சாலைகளை இணைத்து ஈரோடு மாநகராட்சியின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து ஈரோடு வரி செலுத்துவோர் சங்கத்தின் செயலாளர் பாரதி கூறியதாவது: ஈரோடு புதிய இணைப்பு சாலை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா வலியுறுத்தி வந்தார். இந்த புதிய இணைப்பு சாலை திட்டத்திற்கு ஒரு குழு அமைத்து ஆய்வறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் அந்த திட்டம் முன்னேற்றம் தொடர்பாக எவ்வித தகவலும் இதுவரை இல்லை. எனவே தமிழக அரசு இத்திட்டம் செயல்படுத்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோட்டின் கிழக்கு பகுதியில் சாலைகள் விரிவாக்கம் என்பது மிகவும் சவாலாக இருந்து வருகின்றது. தற்போதைய வாகன பெருக்கம், எதிர்கால வாகன பெருக்கம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சிறு, குறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை ஈரோட்டில் புதிய இணைப்பு சாலை திட்டம்: வரி செலுத்துவோர் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Small Farmers Association ,Erode ,Taxpayers Association ,Small Farmers' Union ,Taxpayers' Association ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...