×

சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு

ஈரோடு, ஏப். 6: ஈரோடு சின்னமாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர். ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் மற்றும் வகையறா கோயில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த மாதம் 25ம் தேதி மூன்று கோவில்களிலும் கம்பங்கள் நடப்பட்டன. இதைத்தொடர்ந்து தினமும் பெண்கள் கம்பங்களுக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் காரை வாய்க்கால் மாரியம்மன் கோயிலில் குண்டம் விழா நடந்தது. இதில் பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து 3 கோயில்களிலும் மாவிளக்கு பூஜை நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேர் கோயிலுக்கு அருகில் தயாராக நிறுத்தப்பட்டிருந்து. அதில், அம்மன் எழுந்தருளினார். இதையடுத்து சிறப்பு பூஜை, திருஷ்டி பூஜை முடிந்த பின், பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர், பெரியார் வீதி, அக்ரஹாரம் வீதி வழியாக தேர் சென்றபோது இருபுறமும் பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர். பின்னர் பல்வேறு வீதிகளில் பக்தர்களின் தரிசனத்திற்காக தேர் நிறுத்தப்படுகிறது. தொடர்ந்து, நாளை (7ம் தேதி) தேர்வடம் பிடித்து இழுக்கப்பட்டு சின்ன மாரியம்மன் கோயிலில் நிலை வந்தடைகிறது. நாளை மறுநாள் (8ம் தேதி) கம்பம் எடுக்கும் விழாவும், மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது. வருகிற 9ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

The post சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Chrishna ,Mariamman Temple ,Erode ,Chinnamariamman Temple ,Erod ,
× RELATED இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்