×

(வேலூர்) சைக்கிளில் சென்றவரை ஆட்டோ டிரைவர் தாக்கும் வீடியோசமூக வலைதளத்தில் வைரல்ஓவர்டேக் செய்வதில் தகராறு

குடியாத்தம், ஏப். 6: ஓவர்டேக் செய்வதில் தகராறு ஏற்பட்டு சைக்கிளில் சென்றவரை ஆட்டோ டிரைவர் தாக்கும் வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. குடியாத்தம்- பேரணாம்பட்டு சாலை, காந்தி சிலை அருகே நேற்று சைக்கிளில் செதுக்கரை பகுதியை சேர்ந்த ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வேகமாக வந்த ஆட்டோ, சைக்கிளில் சென்றவரை ஓவர் டேக் செய்து வேகமாக சென்றுள்ளார். அப்போது சைக்கிள் மீது மோதுவதுபோல் சென்றுள்ளார். இதில் ஆட்டோ டிரைவருக்கும் சைக்கிளில் வந்தவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் சைக்கிளில் வந்தவரை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்து தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த சைக்கிளில் வந்தவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சைக்கிளில் வந்தவரை ஆட்டோ டிரைவர் தாக்குவது அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post (வேலூர்) சைக்கிளில் சென்றவரை ஆட்டோ டிரைவர் தாக்கும் வீடியோ
சமூக வலைதளத்தில் வைரல்
ஓவர்டேக் செய்வதில் தகராறு
appeared first on Dinakaran.

Tags : Vellore ,Kudiatham ,Velur ,
× RELATED காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில்...