×

அமைச்சர் ரகுபதி தகவல் கடந்த 2 ஆண்டுகளில் 1,595 போக்சோ வழக்குகளில் தீர்வு

பாபநாசம் எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக) கேட்ட கேள்விகளுக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அளித்த பதில் வருமாறு: பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக தனி நீதிமன்றங்களை தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஏற்கனவே அமைத்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 32 மகளிர் நீதிமன்றங்கள், 33 கூடுதல் மகளிர் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க 16 போக்சோ நீதிமன்றங்கள் உள்ளன. 100 வழக்குகளுக்கு மேல் போக்சோ பிரிவில் பதிவு செய்யப்பட்டால் அந்த மாவட்டத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும். அந்த வகையில் 16 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 2021 ஜனவரி 1 முதல் 2022 டிசம்பர் 31 வரை 3680 போக்சோ வழக்குகள் பதியப்பட்டு 1,595 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

The post அமைச்சர் ரகுபதி தகவல் கடந்த 2 ஆண்டுகளில் 1,595 போக்சோ வழக்குகளில் தீர்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Rughupati Information ,Babanasam ,M. H. Jawahirullah ,Mamaka ,Minister of Law ,Rupathi ,Rugafati ,Information ,Boxo ,
× RELATED ‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’...