×

எதிர்க்கட்சிகள், ஊடகவியலாளர்களை உளவு பார்க்க புதிய மென்பொருளை வாங்கியது ஒன்றிய அரசு; கணினிகள், போன்களுக்குள் ஊடுருவி பார்க்கலாம்..!!

டெல்லி: எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகவியலாளர்களை உளவு பார்க்க புதிய மென்பொருளை ஒன்றிய அரசு வாங்கி உள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாங்கிய இஸ்ரேலில் இருந்துதான் புதிய உளவு மென்பொருளும் வாங்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வாங்கியுள்ள காக்னைட் என்ற மென்பொருள் பெகாசஸுக்கு போட்டியான உளவு மென்பொருளாகும். காக்னைட் மென்பொருளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் குடும்பங்களை உளவு பார்க்க முடியும். செய்தியாளர்கள், அதிருப்தியாளர்களையும் காக்னைட் மென்பொருளைக் கொண்டு உளவு பார்க்க முடியும்.

ஆட்சியை விமர்சிப்போர், மனித உரிமைப்போராளிகளை அவர்களுக்குத் தெரியாமல் உளவு பார்க்க காக்னைட் பயன்படும். செய்தியாளர்கள், எதிர்க்கட்சியினரின் கணினிகள், போன்களுக்குள் ஊடுருவி உளவு பார்க்க காக்னைட் மென்பொருள் பயன்படும். பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு உளவு முகமையின் உள் அமைப்புதான் மென்பொருளை வாங்கி உள்ளது. சிக்னல் உளவு இயக்குனரகம் தான் காக்னைட் என்ற உளவு மென்பொருளை வாங்கி உள்ளது. 2023 ஜனவரியில் கூட மேலும் ஒரு உளவு மென்பொருளை காக்னைட் நிறுவனத்திடம் இருந்து பாதுகாப்பு வாங்கி உள்ளது. பெகாசஸ் உளவு மென்பொருள் சர்ச்சை நீடித்து வரும் நிலையில் தற்போது வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post எதிர்க்கட்சிகள், ஊடகவியலாளர்களை உளவு பார்க்க புதிய மென்பொருளை வாங்கியது ஒன்றிய அரசு; கணினிகள், போன்களுக்குள் ஊடுருவி பார்க்கலாம்..!! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Delhi ,Pegasus ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...