×

பெங்களூருவில் இருந்து ஒடிசாவுக்கு 7 நாளில் 1,000 கி.மீ தூரம் நடந்தே சொந்த ஊர் போன 3 தொழிலாளர்கள்: பிழைப்பு தேடி சென்ற இடத்தில் கொடுமை

காலாஹண்டி: பிழைப்பு தேடி பெங்களூரு சென்ற 3 தொழிலாளர்கள், ஒப்பந்தாரர் நடத்திய கொடுமையால் தங்களது ஊருக்கு 1,000 கி.மீ தூரம் நடந்தே வந்து சேர்ந்தனர். ஒடிசா மாநிலம் காலாஹண்டி மாவட்டம் ஜெய்பட்னா தொகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான கட்டார் மாஜி, புடு மாஜி, பிகாரி மாஜி ஆகியோர், நெல் அறுவடை சீசன் முடிந்த பிறகு தங்களுக்கு வேலை கிடைக்காததால் பிழைப்பு தேடி கடந்த ஜனவரி மாதம் பெங்களூருவுக்குச் சென்றனர். ஆனால் அவர்களை சிலர் ஏமாற்றியதால் பெங்களூருவில் இருந்து காலாஹண்டி வரையிலான 1,000 கிமீ தூரத்தை நடந்தே சென்று ஏழு நாட்களில் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர்.

இதுகுறித்து தொழிலாளி கட்டார் மாஜி கூறுகையில், ‘கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி 3 பேரும் பெங்களூரு சென்றிருந்தோம். கிட்டத்தட்ட ஒரு மாதமாக வேலை செய்தும் எங்களுக்கு கூலியை கொடுக்கவில்லை. செய்த வேலைக்கான சம்பள பணத்தை கேட்டபோது, ஒப்பந்ததாரர் எங்களை அடித்தார். அதனால் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தோம். கையில் இருந்த சொற்ப பணத்துடன், ஆந்திரா, ெதலங்கானா மாநிலங்கள் வழியாக ஒடிசாவிற்கு நடந்தே வந்து சேர்ந்தோம்’ என்று சோகத்துடன் கூறினார்.

The post பெங்களூருவில் இருந்து ஒடிசாவுக்கு 7 நாளில் 1,000 கி.மீ தூரம் நடந்தே சொந்த ஊர் போன 3 தொழிலாளர்கள்: பிழைப்பு தேடி சென்ற இடத்தில் கொடுமை appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Odisha ,Kalahandi ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு...