×

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு 15வது நாளாக இன்றும் முடங்கியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியது. மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி குரல் எழுப்பினார்கள். எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் முழக்கத்தில் ஈடுபட்டார்கள். தமிழ்நாட்டில் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளதால் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இரு தரப்பினரும் மக்களவை சபாநாயகர் அருகே சென்று முழக்கத்தில் ஈடுபட்டதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையும் இதே காரணத்திற்காக பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி வருவதன் காரணமாக நாடாளுமன்றம் 15வது நாளாக முடங்கியுள்ளது. மதியம் 2 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடிய போதும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற குட்டக்குழு விசாரணை கோரி காங்கிரஸ் உள்ளிட கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் முழக்கம் காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Ruling Party ,Lok Sabha ,Delhi ,Parliament ,Rajya Sabha ,Opposition ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...