×

திருப்பத்தூர் மாவட்டத்தில் 485 இடங்களில் முகாம் ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-முகாம்களை கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 485 இடங்களில் 5வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 21ஆயிரம் பேர்  தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முகாம்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 9.45 லட்சம் ஆகும். இதில், 5 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 4.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.திருப்பத்தூர் மாவட்டத்தில் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனையில் தினமும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இம் மாவட்டத்துக்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. மாநில சுகாதாரத்துறை மூலம் கடந்த மாதம் 12ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் தடுப்பூசி முகாமில் 40 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற 2, 3 மற்றும் 4வது மெகா தடுப்பூசி முகாமில் எதிர்பார்த்த அளவுக்கு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. இதனால், பிற மாவட்டங்களை காட்டிலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே இருந்து வந்தது. 4 வாரங்களில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம் 1.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 31 ஆயிரம் நபர்கள் காலக்கெடு கடந்தும் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. அவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள சுகாதாரத் துறையினர் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் 10ம் தேதியான நேற்று மாவட்டம் முழுவதும் 485 இடங்களில் 5வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில், நேற்று ஒரே நாளில் 21ஆயிரம்  பேர் கலந்துகொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர். வீடு, வீடாகச் சென்று சுகாதார ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.5வது மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்து 3 பேருக்கும் தலா ஒரு 32 இன்ச் கலர் டிவி பரிசாக வழங்கப்படும்’’. என்று தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பொதுமக்கள் ஏராளமானோர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.  இந்த முகாமை கலெக்டர் அமர்குஷ்வாஹா எஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்….

The post திருப்பத்தூர் மாவட்டத்தில் 485 இடங்களில் முகாம் ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-முகாம்களை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tirupatur district ,THIRUPATUR ,MEGA CORONA ,VACCINATION ,CAMP ,THIRUPATUR DISTRICT ,Dinakaraan ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் தன்னை...