×

வழிப்பறி, சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க காவலன் ஆப் 112, 100 அவசர எண்களில் உடனே தொடர்பு கொள்ள வேண்டும்: பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்

சென்னை: கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடும் கும்பல் குறித்து பொதுமக்கள் காவலன் ஆப் 112,100 ஆகிய அவசர எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் குற்றங்களை குறைக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு சிறப்பு நடவடிக்கைளை எடுத்து வருகிறார். அந்த வகையில் வழிப்பறி, திருட்டு, சந்தேக நபர்கள் குறித்து பொதுமக்கள் உடனே காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அப்படி அளிக்கப்படும் தகவலின் படி உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமல் இருக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொழுதும், அபராதம் விதிக்கும் பொழுதும் போலீசார் யாரும் பொதுமக்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழற்றி கைப்பைக்குள் பத்திரமாக வைத்து செல்லுங்கள் என சொல்வது இல்லை. மேலும், இது போன்று அருகில் கலவரம் நடைபெறுகிறது என்றும், போலீசார் கூட்டமாக உள்ளனர் என்றும், எனவே அணிந்திருக்கும் நகைகளை பத்திரமாக பையில் வைக்குமாறு கவனத்தை திசை திருப்பி ஏமாற்றும் நபர்களிடமிந்தும், பணநோட்டுகள் மற்றும் சில்லறைகளை கீழே போட்டு பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி பொதுமக்கள் வைத்திருக்கும் பணம் மற்றும் தங்க நகைகளை ஏமாற்றி பறிக்கும் கும்பலிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற சந்தேக நபர்கள் பற்றி தெரிந்தால் பொதுமக்கள் உடனே ‘காவலன் ஆப்’ அல்லது 100, 112 அவசர அழைப்பு எண்களில் காவல் துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த தகவலின் படி உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post வழிப்பறி, சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க காவலன் ஆப் 112, 100 அவசர எண்களில் உடனே தொடர்பு கொள்ள வேண்டும்: பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Kavalan ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…