×

கோடியக்கரையில் குவியத் தொடங்கும் வெளிநாட்டு பறவைகள்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்கும் அக்டோபர் முதல் கோடைகாலம் தொடங்கும். மார்ச் வரை ஆர்டிக் பிரதேசத்தில் நிலவும் கடும்குளிரின் காரணமாக கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்து இருந்து பறவைகள் வருவது  வழக்கம். தற்போது கோடியக்கரையில் பகுதியில் மழை பெய்ய தொடங்கி இருப்பதால் ரஷ்யா, ஈரான், ஈராக், சைபீரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்வேறு வகையான 247 பறவைகள் ஆயிரக்கணக்கில் வர தொடங்கியுள்ளன.கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தை ஒட்டி அமைந்துள்ள கடற்கரை பகுதிகளில்  இலங்கையிலிருந்து கடல் காகம் கூட்டம் கூட்டமாக வந்து அமர்ந்து இறை தேடி வருகிறது. இந்த பறவைகளை பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. வெளிநாட்டு பறவைகளை காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக அளவில் காணலாம் என கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்….

The post கோடியக்கரையில் குவியத் தொடங்கும் வெளிநாட்டு பறவைகள் appeared first on Dinakaran.

Tags : Kodiakarai ,Nagai District ,Kodiyakarai ,Bird Sanctuary Annual ,season ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...